Hayleys Fentons Limited நிறுவனம், 223B, நாவல வீதி நுகேகொடையில் அதன் கன்னி அனுபவ மையத்தை திறந்து வைத்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது.
இந்த முன்னணி வசதியளிப்பு மையமானது, சூரிய சக்தி, தகவல் தொடர்பாடல், பாதுகாப்பு மற்றும் தொடர்பாடல், ஒலி-ஒளி ஒருங்கிணைப்பு (AVI), மின்னியல் மற்றும் ஒளியியல், தீ பாதுகாப்பு தீர்வுகள், வாயுச் சீராக்கம் மற்றும் காற்றோட்டம், நீர்க்குழாய் இணைப்பு மற்றும் எரிவாயு, வசதிகள் முகாமைத்துவம், தடையற்ற மின்சாரம் மற்றும் மின்கல பிரதியீடுகள், கட்டடக்கலை வரைபடங்கள் மற்றும் முப்பரிமாண காட்சிப்படுத்தல், தொழில்துறை உதிரிப்பாகங்களின் விற்பனை உள்ளிட்ட 12 முக்கிய துறைகளில் நிறுவனத்தின் அதிநவீன தீர்வுகளை வழங்குகின்றது.
மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டமைந்துள்ள இந்த அனுபவ மையமானது, பங்குபற்றுதலுடனான தயாரிப்பு விளக்கங்கள், பார்வைக்கு மாறும் நிறுவல்கள் உள்ளிட்டவற்றுடன், பயிற்சி, ஒத்துழைப்பு போன்றவை தொடர்பான அறிவைப் பகிர்வதற்கான பிரத்தியேக பகுதிகளையும் கொண்டுள்ளது.
இது Hayleys Fentons இன் புத்தாக்கமான சேவைகள் கையாளப்படும் விதத்தை அறியவும் அதில் ஈடுபடவும் வருகைதருவோருக்கு வாய்ப்பளிக்கிறது.
நிலைபேறான தன்மை முக்கிய இடத்தைப் பெறும் இந்த அனுபவ மையத்தில், Hayleys Solar இன் BIPV (Building-Integrated Photovoltaic) கூரையில் அமைக்கும் தொகுதியும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் பசுமை புத்தாக்கம் தொடர்பான நிறுவனத்தின் அர்ப்பணிப்பைக் எடுத்துக் காட்டுகிறது.
இந்த மாற்றமுறும் மையத்தைப் பார்வையிட Hayleys Fentons அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறது.