NDB வங்கியானது வனவிலங்கு மற்றும் இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (WNPS) இளைஞர் பிரிவுடன் இணைந்து, விகாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்ற 59வது கொழும்பு சாரணர் முகாமின் போது, நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான நிலையத்தில் [SDG HUB] சுற்றுச்சூழலை மையமாகக் கொண்ட ‘அனல் பறக்கும் விவாதங்களை’ நடத்தியது. SDG HUB ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) ஊக்குவிக்கும் விவாதங்கள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஒரு பிரத்தியேக இடமாக செயற்படுகிறது. SDGகள் மூலம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த நுண்ணறிவு மற்றும் உத்வேகத்தை வழங்குவதே இதன் இலக்காகும்.
இந்த விவாதங்களில் , இலங்கை பட்டாம்பூச்சி பாதுகாப்பு சங்கத்தின் (BCSSL) தலைவரான திருமதி நர்மதா தங்கம்பொல உட்பட ஐக்கிய நாடுகள் சபையின் SDG களின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் மற்றும் இலங்கையின் பேராசிரியர் தீப்தி விக்கிரமசிங்க மற்றும் WNPS ANRM திட்டத்தின் சிரேஷ்ட ஆய்வு அதிகாரி திலின குமாரசிறி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த அமர்வுகள், வனவிலங்குகள் மற்றும் வனப் பாதுகாப்பை வலியுறுத்தி, இலங்கையின் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வினை தூண்டும் வகையில், ‘இயற்கைக்கான தலைவர்கள்’ எனும் சவாலை ஆய்வு செய்வதாக அமைந்திருந்தன.