இலங்கையின் முன்னணி ஆண்கள் ஆடை வர்த்தக நாமமான ஹமீடியா (Hameedia), ஆண்களின் மன ஆரோக்கியத்தை முன்னேற்ற குறிப்பிடத்தக்க நடவடிக்கை எடுத்து 2024 ஆம் ஆண்டு சர்வதேச ஆண்கள் தினத்தை கொண்டாடியது. “உண்மையான ஆண்கள், உண்மையான பேச்சு” (“Real Men, Real Talk”) என்ற தலைப்பில் ஒரு வலையொலி (Podcast) தொடரை அறிமுகப்படுத்தியது. இதன் முதல் அத்தியாயத்தில் அடிக்கடி கவனிக்கப்படாத ஆண்களின் மனநலம் பற்றிய தலைப்பை விவாதிக்க சிறப்பு நிபுணர்கள் குழு கலந்து கொண்டது.
ஹமீடியாவின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஃபௌசுல் ஹமீட் அவர்களால் தொகுத்து வழங்கப்பட்ட இந்த அத்தியாயம் யாசஸ் ஹெவகே (தொழில்முனைவோர், விற்பனை, சந்தைப்படுத்தல் & ஆர்வ பயிற்சியாளர், சைக்கிள் ஓட்டுதல் & நிலைத்தன்மை ஊக்குவிப்பாளர்), அஜய் வீர் சிங் (Colombo Fashion Week மற்றும் நாகரீக & வடிவமைப்பு கல்லூரியின் நிறுவனர்) மற்றும் மருத்துவர் சுனேத் ராஜவாசன் (MBBS, MCGP, குடும்பம் மருத்துவர், மற்றும் The Family Clinic (Pvt) Ltd இயக்குநர்) ஆகியோருடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது.
ஆண்கள் மனநலப் பிரச்சினைகளுக்கு உதவியை நாடும்போது எதிர்கொள்ளும் களங்கம், ஆண்கள் ஏன் பெரும்பாலும் தங்கள் மனநலத்தைப் புறக்கணிக்கிறார்கள், வேலை மற்றும் வாழ்க்கையை திறம்பட சமநிலைப்படுத்துவதற்கான சிறந்த வழிகள் உள்ளிட்ட முக்கியமான தலைப்புகளில் குழு விவாதித்தது.