இலங்கையின் முதல் தர வெளிநாட்டு உயர் கல்வி வழங்குனரான ஆசியா பசிபிக் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் (APIIT Sri Lanka) வருடாந்த பட்டமளிப்பு விழா, 2024 டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி BMICH பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை சிறப்பிப்பதற்காக பிரதம விருந்தினராக ஐக்கிய இராச்சியத்தின் ஸ்டாஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தின் (University of Staffordshire) கூட்டு கல்விப் பங்காளித்துவத் தலைவர் திருமதி. ஜோஆன் ஓவன்ஸ் க்ரூக் அவர்களும் கெளரவ விருந்தினராக இலங்கை நெஸ்லே நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான திரு. பெர்னாட் ஸ்டெபான் அவர்களும் வருகை தந்தனர்.
இப்பட்டமளிப்பு விழாவின் போது 469 மாணவர்களுக்கு ஐக்கிய இராச்சியத்தின் ஸ்டாஃபோர்ட்ஷையர் பல்கலைக்கழகத்தின் வியாபார, தகவல் தொழிநுட்பம், சட்டம் போன்ற துறைகளில் பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் வழங்கப்பெற்றது.
இந்நிகழ்வின் போது மென்பொருள் பொறியியல் (Software Engineering), கணினியியல் (Computer Science), சைபர் பாதுகாப்பு (Cyber Security), சர்வதேச வணிக மேலாண்மை (International Business Management) மற்றும் சட்டம் (Law) போன்ற பட்டப்படிப்புகளுக்கான கௌரவ பட்டங்களும், வணிக நிர்வாகம் (MBA), வணிக கணினி அறிவியல் (MSc Computer Science – Business Computing), மற்றும் சர்வதேச வணிக சட்டம் (LLM – International Business Law) போன்ற பட்டப்படிப்புகளுக்கான முதுகலைப் பட்டங்களும் அளிக்கப்பட்டது.