அழுது கொண்டிருந்த
இதயம் சில
நாட்களாக மௌனமாக
இருக்கிறது என்னவென்று
தெரியவில்லை.
பத்திரமாக பார்த்துக்
கொள்ள இருந்த
உறவு எங்கோ
தொலைந்து விட்டது
போல் உணர
முடிகிறது.
தொலைந்து போன
இன்பம் எங்கேயோ
சிறைபிடிக்கப்பட்டது எதற்காக
எனக்கு தெரியாது
ஆனால் அந்த
புன்னகையினை களவு
கொடுத்திடாமல் பார்த்துக்
கொள்வார்களா எனத்
தெரியாது.
அன்பினால் ஆன
ஏமாற்றம் கண்ட
இதயம் துடிப்பதை
விரைவில் நிறுத்தி
விடுவேன் என
கூறுகிறது அடிக்கடி.
ஏழையாக பிறந்ததால்
ஏழ்மையாக கூற
நினைத்தேன் இளக்காரமாய்
பேசிப் போகிறாள்
என்னுள் வலிகளை
தவிர எதுவும்
இருந்து விடக்
கூடாதென்று.
ஆனால் அவளுக்குத்
தெரியாது என்
வாழ்க்கை வலிகளைக்
கொண்டுதான் தொடங்கியது
என்று இருந்தும்!
இந்த வலி
புதுமையாக இருக்கிறது
காரணம் இதயத்தோடு
சேர்ந்து என்
கண்ணீரும் நகரத்
தொடங்குகிறது கல்லறையை
நோக்கி.
பரவாயில்லை அவளிடத்தில்
நான் பேசியும்
வாழ்ந்தும் இருந்த
நினைவுகளை எனக்கான
கல்லறையில்
விதைத்திருக்கிறேன்
நானும் ஓர்
கல்லறை காதலன்
என்பதால்.
புரிந்து கொள்வாளா
எனத் தெரியவில்லை
என்னைப் பற்றி
அறிந்து கொள்ளாத
அவள்.
–