இரு சக்கர வண்டிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பிரிவில் உலகளாவிய ரீதியில் முன்னணியில் திகழும் TVS மோட்டார் கம்பனி (TVSM) 2.2 kWh பற்றரி மாறுபாடுகொண்ட TVS iQube மின்னியல் ஸ்கூட்டரை ரூ 799,000 அறிமுக விலையில் இன்று அங்குரார்ப்பணம் செய்துள்ளது.
வாடிக்கை யாளர்களின் மாறுபடும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மூன்று வித்தியாசமான வர்ணங்களில் TVS iQube ஸ்கூட்டர் காணப்படுகின்றது.
நிலை பேறுதன்மை கொண்ட இயக்கத்தில் முன்னணியாளர் என்ற ரீதியில் TVSM நிறுவனம், புதுமை மிக்க, நம்பகமான மற்றும் அற்புதமான தயாரிப்புகளை கொண்ட மின்னியல் வாகனத்துறையில் அர்ப்பணிப்புடன் உள்ளது.
TVS Lanka உடன் இணைந்து உருவாக்கப்பட்ட விற்பனைக்குப் பின்னரான வலுவான வலையமைப்பின் மூலம் இந்த அர்ப்பணிப்பு மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
TVS iQube இன் புதிய 2.2 kWh பற்றரி மாறுபாடு, முன்னணியான மின்சார இயக்கத்தை மேலும் அணுகக் கூடியதாக மாற்றுவதுடன், வாடிக்கையாளர்களுக்கான மொத்தச் செலவைக் குறைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இணைக்கப்பட்ட தொழில்நுட்பம், சார்ஜ் செய்வதற்கான தீர்வுகள் மற்றும் விலை மூலம் தேர்வு செய்வதற்கான சக்தியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல், வாகனத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் உரிமைக்கான அனுபவத்தின் ஊடாக முழுமையான உத்தரவாதம் மற்றும் வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தக் கூடிய இலகுவான பயன்பாடு ஆகிய மூன்று அடிப்படை கொள்கைகள் மூலம் TVS iQube ஸ்கூட்டர் ஈர்க்கப்பட்டுள்ளது.