24
பாராளுமன்றத்துக்கான ஐ.தே.க தலைவராக முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.கவின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டது. இதில் 46,438 விருப்பு வாக்குகளை பெற்ற, இ.தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகினார். இதனையடுத்தே ஐ.தே.வின் பாராளுமன்ற தலைவராக ஜீவன் தொண்டமான் நேற்று முன்தினம் (06) தெரிவு செய்யப்பட்டார்.