8
மரியாதை என்பது
உனதுரிமை
அதை பேணிடுதல்
அறிவுடைமை…
இழக்கப்படுவது எங்கென்பது
எமக்கான சோதனை..
அதில் வெல்ல நினைப்பது
எமதான சாதனை..
காயங்களைக்
கட்டிக்கொண்டிருப்பதெல்லாம்
பெருஞ்சுமை..
கண நேரத்தில்
கலங்கச் செய்துவிடும்
எம்மை..
அவசரப் புத்தி
அடங்க மறுக்கும்
பெருந்தீ
அமைதியாய்க் கடப்பதில்
அழகாய் உணர்வாய்
உனை நீ..
காரியங்கள் எல்லாம்
கச்சிதமாய் முடிவதே
எம் சித்தம்..
கண்ணயரும் போதும்
கடுகளவும் இருக்காது
குற்றம்..
முடிந்தவரை முடிவை
இறைவனிம்
ஒப்படைப்பதே
தவம்..
முழுதாய்ப் பொழியும்
அருள்களே உனக்கான
வரம்…