7
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய “தமிழர் செவ்வியல் ஆடல்-2024″ மூன்று நாள் நிகழ்வானது கடந்த வெள்ளிக்கிழமை மாலை நூற்றாண்டுத் தமிழ் ஆளுமை பேராசிரியர் சு.வித்தியானந்தன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் சிவதட்ஷண ஹரிஹரன் மங்கள விளக்கேற்றலையடுத்து சக்திகா சிறி குமரனின் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. தொடர்ந்து பேராசிரியர் சபா. ஜெயராசா, “தமிழர் செவ்வியல் ஆடல்: குறுக்கீடுகளும் வளர்ச்சியும்” என்ற தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றியதையடுத்து, சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன் முதற்பிரதியை இலக்கியப் புரவலர் ஹாஷிம் உமர் பெற்றுக் கொண்டார்.