கொழும்பு,யாழ்ப்பாணத்துக்கிடையே ஆரம்பிக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் சேவை, இம்மாதம் (30) வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் இச்சேவை நடத்தப்பட்டது. இந்நிலையில்,தற்போதைய பாடசாலை விடுமுறை மற்றும் சுற்றுலா பயணிகளின் கோரிக்கை என்பவற்றைக் கருத்திற் கொண்டு,இம்மாதம் (30) வரை இச்சேவையை தொடர்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தினமும் காலை 5.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில்,அன்றைய தினம் பிற்பகல் 11:15 மணிக்கு யாழ். ரயில் நிலையத்தை சென்றடையும்.
யாழ். காங்கேசன்துறையிலிருந்து மதியம் 12.34 க்கு புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை இக்கடுகதி வந்தடையும்.