Home » தரமற்ற மருந்துகள்; அரசு விளக்கமளிப்பு

தரமற்ற மருந்துகள்; அரசு விளக்கமளிப்பு

by Damith Pushpika
December 8, 2024 7:45 am 0 comment

அரசாங்க வைத்தியசாலை கட்டமைப்புக்குள் தரமற்ற மருந்துகள் வழங்கப்படவில்லையென சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். தரமற்ற மருந்துகள் தொடர்பாக கடந்த வியாழன் (05) வெளியான செய்தி தொடர்பாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அமைச்சர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்;

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட மருந்துகள் மட்டுமே இந்த அதிகார சபையினூடாக விநியோகிக்கப்படுகின்றன. தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை வினைத்திறனற்ற நிலையில் காணப்படுகிறது. தற்காலிக மற்றும் நிரந்தரப் பதிவுகள் தற்போது விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.

ஆனால்,இவ்வாறு கூறும் விதமாக தரமற்ற மருந்துகள் அரசாங்க வைத்தியசாலைக் கட்டமைப்பின் ஊடாக செல்லவில்லை.

தரத்தின் தன்மை தொடர்பாக பிரச்சினை இருப்பின் அது அறிவிக்கப்படும்.

இது தொடர்பாக எதிர்காலத்தில் விரிவாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதாக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெளிவுபடுத்தினார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division