44
பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் (2025) முதல் தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (06) நடைபெற்ற நிகழ்வொன்றில், உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பாடசாலை சீருடைத் துணிகளை விநியோகிக்கும் நடவடிக்கைகளில், பெருமளவிலான துணிகள் வீணடிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனாலயே,தைக்கப்பட்ட சீருடைகளை வழங்கும் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.