35
அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த 2025 முதல், நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை,வாக்கெடுப்பின்றி பாராளுமன்றத்தில் (06) நிறைவேற்றப்பட்டது. இந்த நான்கு மாதங்களிலும் அரசாங்கத்தின் பணிகள் மற்றும் கடன் சேவைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும் இந்த இடைக்கால கணக்கறிக்கை கடந்த (03) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதற்கமைய, கடந்த 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை விவாதம் நடைபெற்றது. இவ்விவாதம் கடந்த (06) நிறைவடைந்ததும் வாக்கெடுப்பின்றி இது, நிறைவேற்றப்பட்டது.