சிறுவர்களை விளம்பரங்களில் பயன்படுத்துவதை தடைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுனி தெரிவித்துள்ளார்.
2025 ஜனவரியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இது நடைமுறைப்படுத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் தெரிவித்த பிரதி அமைச்சர்,
“குறிப்பாக 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை தடுப்போம். அதற்கான வர்த்தமானியை அமல்படுத்துவதற்கான அனைத்து பணிகளையும் செய்துள்ளோம். ஏனெனில் கடந்த அரசாங்கங்கள் இதனை 7-8 வருடங்களாக இழுத்தடிப்பு செய்தன.
கடந்த வாரம் நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம்.இம்முடிவை நாங்கள் இழுத்தடிக்கப் போவதில்லை என்றார்.