இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச்சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான க்லோகார்ட், தனது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட க்லோகார்ட் Mouthwash வகைகளை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. Clove Mouthwash மற்றும் Mint Mouthwash ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கும் இந்த புதிய தயாரிப்பானது, இலங்கை பாவனையாளர்களின் வாய்ச் சுகாதார நடைமுறைக்கு மேலும் அதிக பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நாளாந்தம் வாய்ச்சுகாதார பராமரிப்பு பழக்கத்தில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தி சிறந்த சுகாதார பலனை பெற உதவும்.
புதிய க்லோகார்ட் mouthwash ஆனது, புளோரைட்டை கொண்டுள்ளதோடு, சிறந்த வாய் ஆரோக்கியத்திற்கு உதவும் கிராம்பு மற்றும் புதினா போன்ற இயற்கை பொருட்களுடன் விசேடத்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராம்பு, புளோரைட் கலவையானது, பற் சொத்தை ஏற்படுவதைத் தடுக்க உதவுவதோடு, கிருமிகளை எதிர்த்துப் போராடுகிறது. அத்துடன் நீண்ட கால பாதுகாப்பிற்காக பல் மிளிரியை பலப்படுத்துகிறது. புதினா பக்டீரியாவை எதிர்த்துப் போராடும் அதேவேளை, நீண்ட நேர புத்துணர்ச்சியை வழங்குகிறது. ஒருவர் தினமும் க்லோகார்ட் மவுத்வாஷை வாய்ச்சுகாதார பராமரிப்பிற்காக பயன்படுத்தும் வழக்கத்தில் கொள்வதன் மூலம், பற் சொத்தை மற்றும் ஈறு பிரச்சினைகள் போன்ற பல் பிரச்சினைகளின் அபாயத்தைத் குறைக்க முடியும் என்பதோடு, பொதுவான பல் பிரச்சினைகளுக்கு எதிராக மேலதிக பாதுகாப்பை பெற முடியும். க்லோகார்ட் Mouthwash புதிய தயாரிப்பு வகைகள் இலங்கை பல் மருத்துவ சங்கத்தின் (SLDA) அங்கீகாரத்தைப் பெற்ற இலங்கையின் முதலாவது mouthwash ஆகும்.
இந்த அங்கீகாரமானது, இத்தயாரிப்புகளின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை கோடிட்டுக் காட்டுகிறது.