NDB வங்கியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான அதன் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் பெருநிறுவன நிலைபேற்றுத்தன்மையில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
நவம்பர் 21, 2024 அன்று, 2024 நிதியாண்டிற்கான விரிவான பசுமை இல்ல வாயு (GHG) மதிப்பீடு மற்றும் சரிபார்ப்பை மேற்கொள்வதற்காக, இலங்கை காலநிலை நிதியத்துடன் (SLCF) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டதன் மூலம் வங்கி மற்றொரு மைல்கல்லைஅடைந்துள்ளது .
தெற்காசியாவின் முதல் ISO 14064 அங்கீகாரம் பெற்ற அமைப்பான SLCF உடனான பங்குடமையானது, அதன் கார்பன் தடயத்தைக் குறைப்பதற்கும் நிலையான நடைமுறைகளை அதன் செயல்பாடுகளில் ஒருங்கிணைப்பதற்கும் NDB மேற்கொண்டுள்ள முயற்சிகளின் பிரதிபலிப்பாகும். GHG மதிப்பீடு, கார்பன் தடம் சரிபார்ப்பு என்றும் அறியப்படுகிறது, NDB இன் தலைமை அலுவலகம் மற்றும் அதன் விரிவான கிளை வலையமைப்பினை இந்த கார்பன் சரிபார்ப்பு உள்ளடக்கும்.
இந்த கடுமையான மதிப்பீடானது முன்னேற்றத்திற்கான பகுதிகளை அடையாளம் கண்டு, கார்பன்-நடுநிலை அமைப்பாக மாறுவதற்கான பயணத்தில் வங்கியை வழிநடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முன்முயற்சியின் முக்கிய அம்சமானது SLCF இன் GHG நிபுணர்களால் நடத்தப்படும் பயிற்சி அமர்வுகள் ஆகும்.
இந்த பயிற்சி அமர்வுகள், சிரேஷ்ட முகாமைத்துவம் உட்பட NDB ஊழியர்களுக்கு, நிலைபேற்று த்தன்மையின் கலாசாரத்தை வளர்க்கும் நோக்கத்துடன் கார்பன் உமிழ்வுகளைப் புரிந்துகொண்டு நிர்வகிக்கும் அறிவைவழங்குகின்றன.இந்த முயற்சியானது சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதில் NDBயின் முந்தைய சாதனைகளை அடிப்படையாகக் கொண்டது. குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஆற்றல்-திறனுள்ள விளக்குகள், உகந்த குளிரேற்றி அமைப்புகள் மற்றும் NDB NEOSசெயலி போன்ற டிஜிட்டல் வங்கி தீர்வுகள் ஆகியவற்றை பயன்படுத்துவது சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதில் அடங்குகின்றது.