நவம்பர் 28 ஆம் திகதி, உலகளாவிய ஆடை- தொழில்நுட்ப மாபெரும் நிறுவனமான MAS மற்றும் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் (UNFPA) ஆகியவை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.
பெண்களின் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு வருட ஒத்துழைப்பின் தொடக்கத்தையே குறிக்கிறது இந்த கூட்டாண்மை.
இந்த ஒப்பந்தம், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் முதலீட்டை அதிகரிப்பதற்கான MAS மற்றும் UNFPA இடையேயான பகிரப்பட்ட தூரநோக்குப் பார்வையை ஒருங்கிணைக்கிறது. இது ஆடையியல் துறையில் உள்ள பெண்களுக்கும் இளம் யுவதிகளுக்கும் அதிகாரமளித்து ஊக்குவித்து, தங்கள் கருத்தை வெளிப்படுத்தவும், நிறுவனங்கள் பாதுகாப்பான பொது தளங்களை உருவாக்கவும் வலியுறுத்துகிறது. இந்த கூட்டாண்மையின் மூலம், இரு அமைப்புகளும் இணைந்து மருத்துவ மையங்களை மேம்படுத்துதல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துதல் மற்றும் ஆடைத் துறையின் ஊழியர்களுக்கு இலகுவாக அணுகக்கூடிய விதத்தில் நல்வாழ்வு வசதிகளை BOI பிரிவிற்குள் உருவாக்குதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளன. “பெண்களின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்வுக்கும் ஒத்துழைப்பது என்பது சரியான விடயமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நம் சமூகங்களுக்கும் வணிகங்களுக்கும் புத்திசாதுரியமான செயற்பாடாகும். இந்த கூட்டாண்மை ஆனது நாம் ஒன்றாக இணைந்து ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த கூடிய தெளிவான கட்டமைப்பை எங்களுக்கு வழங்குகிறது.” என MAS Holdingsஇன் பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ தெரிவித்தார்.