ஐக்கிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லையென கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
2024 பொதுத் தேர்தலின்படி, ஐக்கிய மக்கள் சக்தி 05 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பெற்றுள்ளதுடன், அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார அவற்றில் ஒன்றுக்கு தெரிவு செய்யப்பட்டார்.
இறுதித் தீர்மானத்துக்கான திகதியை இன்னும் அறிவிக்க முடியாதெனவும், எனினும் கூடிய விரைவில் இறுதித் தீர்மானம் எட்டப்படவேண்டுமெனவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்ட கட்சிகள் மட்டுமல்ல சுயேச்சையாக தற்போதும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.
அத்துடன், புதிய ஜனநாயக முன்னணியின் எஞ்சியுள்ள தேசியப்பட்டியல் எம்.பி பதவிகள் தொடர்பாகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.