உலக சிறுவர் தினத்தை கொண்டாடும் வகையில், Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி பிரிவான Hayleys Solar நிறுவனம், சர்வதேச புத்தக கண்காட்சியில் (BMICH) சிங்களம், தமிழ், ஆங்கிலத்தில் “சூரியகாந்தியும் தேனீயும்” எனும் சிறுவர் கதைப் புத்தகத்தை வெளியிட்டது.
இளம் வாசகர்களிடையே சூரிய சக்தியின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ‘சூரிய சக்தி – கொண்டுள்ள பணி’ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கான அழைப்பின் மூலம் பொறுப்புணர்வை ஏற்படுத்தவும் Hayleys Solar நிறுவனம் மேற்கொண்ட முயற்சியாகும்.
இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய Hayleys Fentons இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஹசித் பிரேமதிலக்க, “சூரிய சக்தி தொடர்பான இந்த சிறுவர் நூலை வெளியிடுவதன் மூலம், அடுத்த தலைமுறைக்கு நிலைபேறான வலுசக்தி தீர்வுகளைத் தழுவி, எமது பூமியின் எதிர்காலம் குறித்த ஆர்வத்தைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். எமது அழகான நாட்டிற்கு நிலைபேறான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அறிவு மற்றும் விருப்பத்துடன் எமது சிறுவர்களை வலுவூட்ட விரும்புகிறோம்.” என்றார்.
Hayleys Solar நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) ரொஷேன் பெரேரா தெரிவிக்கையில், “இந்நூலானது, வலுசக்தி பிரச்சினைகளுக்கு நிலைபேறான தீர்வுகளை சிறுவர்களுக்குக் கற்பிப்பதோடு, அவர்கள் சூரிய சக்தியைப் புரிந்துகொள்ள உதவுவதோடு, எமது தேசத்தின் எதிர்கால தலைவர்களிடையே சூழல் பொறுப்பை ஊக்குவிப்பதையும் கற்பிக்கிறது.” என்றார்.