Home » அரசின் நல்ல திட்டங்களை என்றும் ஆதரிக்கத் தயார்

அரசின் நல்ல திட்டங்களை என்றும் ஆதரிக்கத் தயார்

திகாமடுல்ல MP அஷ்ரப் தாஹிர் உறுதி

by Damith Pushpika
November 24, 2024 7:30 am 0 comment

நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய சிறந்த திட்டங்களுக்கு ஆதரவளிக்கத் தயாரென, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.

முதலாவது பாராளுமன்ற அமர்வின் நிறைவில் (21) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்தி, நாட்டைபொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பது, மக்களின் வறுமை நிலையை இல்லாதொழிப்பது மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது போன்ற பல்வேறு திட்டங்களை முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்திருந்தார். அவற்றை நிறைவேற்றுவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் வேண்டியிருந்தார்.

எனவே,நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய ஜனாதிபதியின் சிறந்த திட்டங்களுக்கு ஆதரவளிக்க தாம், தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தன்னை பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தமைக்காக கட்சியின் தலைமை, கட்சி மத்திய குழு, மாவட்ட மத்திய குழு, சக வேட்பாளர்கள் மற்றும் எனக்கு வாக்களித்த அனைத்து உடன் பிறப்புக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்.

கடந்த காலங்களிலும் மக்கள் வழங்கிய பதவிகளை நியாயமாக, நேர்மையாக செய்தவன் நான்.இந்த வகையில் எனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் நேர்மையாகவும் நியாயமாகவும் மக்கள் விரும்புகின்ற வகையில் பயன்படுத்துவேன்.

அபிவிருத்தி மற்றும் உரிமைக்காக தொடர்ந்தும் குரல் கொடுப்பேன்.அதேபோல், கட்சியின் வளர்ச்சியின் அதிக கவனம் செலுத்துவதுடன் கட்சிக்காக முழுமையாக பங்காற்ற உள்ளேன.

திகாமடுல்ல மாவட்டத்தின் கட்சிக்கான பாராளுமன்ற உறுப்புரிமையை இரண்டாக அதிகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். இவ்வாறு அவர், தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division