உன் இனிய குரலோசை பிடிக்கும்
உன் பசுமையான பார்வை பிடிக்கும்
உன் சிவந்த கண்ணங்கள் பிடிக்கும்
உன் கனிந்த கண்கள் பிடிக்கும்
என்னை நீ நேசிக்கும்
நிமிடங்கள் பிடிக்கும்
நீ அணியும் ஆடைகள் பிடிக்கும்
அவ் ஆடைகளின் வர்ணங்கள் பிடிக்கும்
உன் மேனியின் ஸ்பரிசங்கள் பிடிக்கும்
உன் கருமையான கூந்தல் பிடிக்கும்
அக் கூந்தலில் அணியும் பூக்களும் பிடிக்கும்
அக் கூந்தலின் நறு மணமும் பிடிக்கும்
உன் உதட்டின் அழகு பிடிக்கும்
அவ் உதட்டின் முத்தங்கள் பிடிக்கும்
அவ் உதட்டின் சாயங்களும் பிடிக்கும்
உன் நேரிய மூக்கு பிடிக்கும்
அம் மூக்கின் அழகிய கம்மலும் பிடிக்கும்
உன் காதுகளும் பிடிக்கும்
அக் காதுகளில் ஆடும் சிமிக்கியும் பிடிக்கும்
உன் அழகிய பாதங்கள் பிடிக்கும்
அப் பாத விரல்களில் அணியும்
அழகிய மெட்டிகளும் பிடிக்கும்
உன் அழகிய கால்கள் பிடிக்கும்
அக் கால்களில் அணியும்
அழகிய கொலுசுகளும் பிடிக்கும்
அக் கொலுசுகள் ஒலிக்கும்
கொலுசுகளின் ஓசையும் பிடிக்கும்
மொத்தத்தில்….
எனக்கு மட்டும் நீ சொந்தமானதால்
நீ செய்வதெல்லாம் எனக்குப் பிடிக்கும்
எனக்கு எல்லாம் பிடிக்கும்….
25
previous post