புபுதுகம பிரதேசத்தில் கண்டல் தாவர மறுசீரமைப்பு செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக வனப் பாதுகாப்பு திணைக்களத்துடன் SLT-MOBITEL கைகோர்த்துள்ளது. இந்தப் பங்காண்மையினூடாக 4.2 ஹெக்டெயர் பரப்பில் கண்டல் தாவரங்களை மீளமைப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், அவற்றின் நீண்ட கால நிலைபேறாண்மை உறுதி செய்யவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் இலங்கை வனப் பாதுகாப்பு திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது. வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் பாதுகாவலர் நாயகம் நிஷாந்த எதிரிசிங்க, இலங்கை தேசிய கண்டல் தாவர நிபுணர் குழுவின் தலைமை அதிகாரி பேராசிரியர். செவ்வந்தி ஜயகொடி, SLT-MOBITEL இன் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க, SLT சந்தைப்படுத்தல் சேவைகள் பொது முகாமையாளர் அனுருத்த சூரியாரச்சி மற்றும் இரு நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
SLT-MOBITEL இன் சூழல், சமூக மற்றும் ஆளுகை (ESG) தொனிப்பொருளான ‘Co-Connection,’ என்பதுடன் ஒன்றிணைந்ததாக இந்தத் திட்டம் அமைந்திருப்பதுடன், அதன் செயற்பாடுகள், சூழல் மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கிடையே ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. கண்டல் தாவர மறுசீரமைப்பு செயற்திட்டத்தினூடாக, ஐக்கிய நாடுகள் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு (SDGs) நேரடியாக ஆதரவளிக்கப்படுகின்றது.