ஆரோக்கியமான தேசத்துக்கான தமது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்து மற்றும் இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பு இல்லாத கோழி இறைச்சி துறையை உருவாக்கும் வகையில், நியு அந்தனீஸ் குரூப், நவம்பர் 18 முதல் 24 ஆம் திகதி வரை நடைபெற்ற உலக AMR விழிப்புணர்வு வார (WAAW) நிகழ்வில் உறுதிமொழியில் கைச்சாத்திட்டது.
நவம்பர் 19 ஆம் திகதி குழுமத்தின் ஹங்வெல்ல பகுதியில் அமைந்துள்ள தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் பிரதான வாடிக்கையாளர்கள், பங்காளர்கள், சுகாதார துறை நிபுணர்கள், பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். குழுமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எமில் ஸ்டான்லி வரவேற்று உரையை ஆற்றியிருந்ததுடன், உலக சுகாதார ஸ்தாபனத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிகழ்வில் பிரதான வளவாளராக பங்கேற்ற கலாநிதி. கிஷானி தினபாலவின் விளக்கங்களும் முன்னெடுக்கப்பட்டன.
நியு அந்தனீஸ் குரூப் முன்னெடுக்கும் WAAW- இல் கவனம் செலுத்தும் செயற்பாடுகளின் ஒரு அங்கமாக இது அமைந்திருந்ததுடன், AMR க்கு எதிராக திரண்ட நடவடிக்கையையும், “ஒரு சுகாதாரம்” வழிமுறையை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருந்ததுடன், இது மனிதன், விலங்கு மற்றும் சூழல் சுகாதார செயற்பாடுகளை ஒன்றிணைப்பதாகவும் அமைந்திருந்தது.