இலங்கையின் முன்னணியில் உள்ள பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான DIMO நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவான DIMO Healthcare மற்றும் Simens Healthineers ஆகியன இலங்கையில் புற்றுநோய் சிகிச்சையை மேலும் மேம்படுத்துவதற்கான தங்கள் உறுதியான அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளன. AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் சமீபத்திய Siemens CT Simulator உபகரணமான SOMATOM go.Sim அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் இது நிலைநாட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் புற்றுநோய் சிகிச்சைத் துறையில் பாரிய முன்னேற்றத்தை பதிவு செய்யும் வகையில், தனியார் துறை புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சையின் முன்னோடி மையமான செலிங்கோ புற்றுநோய் மையத்தில் இந்த அதிநவீன CT Simulator நிறுவப்பட்டுள்ளது.
செலிங்கோ புற்றுநோய் மையமானது 2007 ஆம் ஆண்டு DIMO Healthcare நிறுவனத்துடன் இணைந்து கதிரியக்க சிகிச்சைப் பிரிவை நிறுவியது. அப்போதிருந்து, DIMO Healthcare நிறுவனத்தின் ஒப்பிட முடியாத விற்பனைக்குப் பிந்தைய சேவையானது இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளதோடு, செலிங்கோ புற்றுநோய் மையத்தில் சமீபத்திய CT Simulator இயந்திரத்தை நிறுவுவதற்கு DIMO Healthcare நிறுவனத்தை தெரிவு செய்வதற்கான முக்கிய காரணியாக இது அமைந்தது.
SOMATOM go.Sim ஆனது ஒரு ஒருங்கிணைந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தீர்வாகும். SOMATOM go.Sim மிகவும் சிறந்த தரத்திலான புகைப்படங்களை வழங்குவதோடு, AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம், சரியான சிகிச்சை முறைகளைத் திட்டமிடுவதற்கும், தொடக்கத்திலேயே சிக்கல்களை கண்டறிந்து நீக்கவும் உதவுகின்றது.