செலான் வங்கியின் மேசைப் பந்து அணிகள் அம்பலாங்கொடை, SRS விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற நிறுவனங்களுக்கு இடையேயான 65ஆவது மேசைப் பந்து லீக் சம்பியன்ஷிப் 2024ல் சிறப்புத் திறமை மற்றும் உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியது.
செலான் வங்கியின் ஆடவர் அணி ‘A’ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து போட்டி முழுவதும் தங்கள் திறமை மற்றும் போட்டித் தன்மையை வெளிப்படுத்தியது. அதேவேளை, செலான் வங்கியின் மகளிர் அணி, ‘C’ பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்று அணிக்கு குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்தது.
2024ஆம் ஆண்டு முழுவதும், செலான் வங்கி ஆடவர் அணி தொடர்ந்து உயர் மட்ட திறமையை வெளிப்படுத்தி வந்துள்ளது.
அவர்கள் நிறுவனங்களுக்கு இடையேயான 65ஆவது Knockout மெர்க்கன்டைல் Knockout மேசைப் பந்து சம்பியன்ஷிப் 2024ல் இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன் நிறுவனங்ளுக்கு இடையேயான 69ஆவது மெர்க்கன்டைல் ஓபன் மேசைப் பந்து சம்பியன்ஷிப் 2024ல் பங்கேற்றனர்.
செலான் வங்கியின் முக்கிய வீரரான சாலித ரஞ்சன, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஏராளமான பாராட்டுக்களுடன் சிறந்த இலக்குகளை எட்டியுள்ளார். 2024இல் சாலித ஓபன் மாஸ்டர்ஸ் ஒற்றையர் பிரிவில் சம்பியனானதுடன் ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றார். மேலும் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.