NDB வங்கியானது சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு [SME] ஆதரவு வழங்கும் வகையில் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி காலியில் உள்ள மவுண்ட் ரிச் ஹோட்டலில் பிரத்தியேக டிஜிட்டல் மாற்றதிற்கான மன்றத்தை நடத்தியது.
இந்த நிகழ்வானது தென் பிராந்தியத்தைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர முயற்சிகளில் [SME] ஈடுபடும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் புதுமையான NEOSBIZ செயலியை[App] அனுபவிப்பதற்கான ஊடாடும் தளத்தை வழங்கியது.
NEOSBIZ செயலியின் விரிவான அம்சங்களை மன்றம் சிறப்பாக வெளிப்படுத்தியது. பாரம்பரிய நிதியியல் முகாமைத்துவ செயல்முறைகளை மாற்றும் திறன், பரிவர்த்தனை பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் தரவு சார்ந்த முடிவுகளை எடுக்க வர்த்தகங்களுக்கு உதவும் நிகழ்நேர நுண்ணறிவுகளை வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
NDB வங்கியானது SME களுக்கு ஒன்றில் அனைத்தையும் பெறுவதற்கான டிஜிட்டல் வங்கியியல் தீர்வை வழங்குவதன் மூலம், வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் போட்டித்தன்மையுடன் இருக்கத் தேவையான அம்சங்களை உள்நாட்டு தொழில்முனைவோருக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் NDB இன் சிரேஷ்ட நிர்வாகிகள் தலைமையில் பயன்மிகு அமர்வுகள் இடம்பெற்றன,
அவர்கள் SME துறையினை வலுப்படுத்தல் மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான வங்கியின் கண்ணோட்டம் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.