தேசத்தை நாம்
நேசித்தால்
தேசம் சுபீட்சமாகும்!
தேசமைந்தர் நாம்
ஒன்றாகிட்டால்
தேசம் விருத்தியாகும்!
தேசத்தில் சமத்துவம்
என்றாகிட்டால்
சமநீதி
தளைத்தோங்கும்!
மனங்களை நாம்
மதித்திட்டால்
இனங்கள்
இணைந்து கொள்ளும்!
நாடென்றால் நம்நாடு
நல்வளம் மிக்க நாடாகும்!
எல்லோரையும் கவர்ந்த
எழில்மிக்க நாடாகும்!
நாட்டுக்காய் நாம்
உழைத்தால்
நம்நாடு பொன்னாகும்!
நாட்டுமக்கள்
நாமெல்லாம்
நம்நாட்டின் கண்ணாகும்!
ஊழல் என்று இருந்தாலே
உயர்வு நாட்டில்
குறைந்துவிடும்!
இலஞ்சம் என்று வந்திட்டால்
இலட்சியமெல்லாம்
தாழ்ந்துவிடும்!
மோசடி நாட்டில் நடந்திட்டால்
சீரமைப்பு எல்லாம்
கெட்டுவிடும்!
சுரண்டல் நாளும்
நடந்தாலே
நாட்டின் வளங்கள்
தானாய் அழிந்துவிடும்!
நேசமகனாய் இருக்கின்ற
நேசமக்கள் நாமெல்லாம்
தேசம் சுபீட்சம்
அடைவதற்கும்
தேசம் உயர்வு
பெறுவதற்கும்
சமத்துவம் சமநீதி சகவாழ்வு
அமைவதற்கும்
ஆற்றல்மிக்க அரசியலில்
அனைவரும் ஒன்றாய்
இணைவோமா?
மாற்றம் வாழ்வில்
காண்போமா?
மறுமலர்ச்சி அடைவோமா?