40
வாசிப்பை நேசிப்போம்
தினமும்
வாழ்வுடன் வழிகாட்டும்
தீபம் ஏற்றிடுவோம்
கைபேசி பழக்கமிது
வந்ததனால்
கைவிட்டு போனதுமே
இச்செயற்பாடு
வீடுசென்றதுவே
தொலைக்காட்சி
வீரமுடன் காண்பதுவே
கிரிக்கெட் காட்சி
நேரமது செல்வதுவே
தெரிவதில்லை
யோசித்தால் தினமும்
பெருங்கவலை
பள்ளி கோவில் ஆலயம்
மறந்து போச்சு
பக்குவமாய் நினைவிலில்லை
இறையாட்சி
ஆடையுமே அசிங்கமாக
மாறிட்டு
ஆண்டவனே நீ இதற்கு
சாட்சி
இனமத பேதமும்
ஓங்கிட்டு
ஈன்றெடுத்த பெற்றோர்
மகிமையும் போயிற்று
தேசத்தில்
ஒழுக்கமதும் ஓங்க
வேண்டும்
ஓரிறைவன் கொள்கைதனை
ஏற்க வேண்டும்