சுகாதார அமைச்சினால் பிரகடனப்ப்படுத்தப்பட்டுள்ள சின்னமுத்து நோய்க்கெதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரனின் வழிகாட்டலில் நடைபெற்ற மாவட்டத்தின் பிரதான பைபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார் .
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எம்.சிவலிங்கம் உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள்,பொது சுகாதார பரிசோதகர்ஙள், தாதியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமாரின் தலைமையில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.
பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள், தாதியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் என சுமார் 5,000 பேருக்கு இன்று தடுப்பூசி ஏற்றப்பட்டதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமார் தெரிவித்தார். மாவட்டத்தில் ஆறு இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றன.
இவ்வாரம் முழுவதும் சின்னமுத்து தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இடம் பெறுமென சுகாதார வைத்தியதிகாரி மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு குறூப் நிருபர்