66
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 11 வேட்பாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தமை, சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளைக் காட்சிப்படுத்தியமை, சந்தேக நபர்களை விடுவிப்பதற்காகப் பொலிஸ் நிலையங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை ஆகிய குற்றச்சாட்டின் பேரிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில், வேட்பாளர்களின் 353 ஆதரவாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.