மலேசிய பினாங்கு மாநிலத்தில் ஜனவரி 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் தேவான் ஸ்ரீ பினாங்கு அரங்கில் நடைபெறவுள்ள 11 ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து தமிழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள உள்ளனர். அந்நிகழ்வு தமிழக அரசின் சிறு குறுந்தொழில் அமைச்சகம், மலேசிய அரசின் சிறு குறு தொழில் அமைச்சகம் எனபனவற்றின் அனுசரணையுடன் நடைபெறும். இந் நிகழ்விற்கு மலேசிய இந்திய வர்த்தக சம்மேளனம், மலேசிய இந்திய பினாங்கு வர்த்தக சம்மேளனம், மலேசிய முஸ்லிம் வர்த்தக சங்கம் என்பன ஆதரவு வழங்கும். இந்நிகழ்வில் கலை, கலாச்சாரம், பாரம்பரிய உணவு, உடை, பல்வேறு நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களின் பேருரை போன்ற நிகழ்வுகளுடன், குளோபல் கனெக்ட் கான்ஃபரன்ஸ் மற்றும் கண்காட்சி போன்ற நிகழ்வுகள் நான்கு அமர்வுகளாக நடைபெற உள்ளன.
அந்நிகழ்வில் பெண் தொழில் முனைவோர் மற்றும் பெண் ஆளுமைகள் பங்கேற்கும் ஓர் அமர்வு நடைபெற உள்ளது. அந்நிகழ்வில் பல்வேறு நாடுகளில் உள்ள பெண் தொழில் முனைவோர் மற்றும் சுய உதவிக் குழுக்கள், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், தாங்கள் பேசும் தாய் மொழியிலேயே சந்தைப்படுத்தவும், தொழில் முறை கற்கவும், தமிழ் பெண் சமுதாயம் மேம்படவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பெண் ஆளுமைகள் மட்டுமல்லாமல் கவுன்சிலர்கள், மேயர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில, மத்திய அமைச்சர்கள் போன்றோர் கலந்து அரசாங்கங்களின் சலுகைகள், மானியங்களை எவ்வாறு பெறலாம் என அறிய, வழிவகை செய்யப்பட்டுள்ளது என உலகத்தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலகத்தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
தொடர்புக்கு +60166167708