ஜனசக்தி குழுமம் (JXG), மார்பு புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு தமது ஊழியர்கள் மத்தியில் நலனை மேம்படுத்துவதற்காக இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார பராமரிப்பு சேவைகளை வழங்கும் ஆசிரி ஹெல்த் உடன் கைகோர்த்து வெபினார் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வை இராணுவ வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை ஆலோசனை வைத்தியரான தாத்தியா டி சில்வா முன்னெடுத்திருந்தார்.
இந்த அமர்வை ஏற்பாடு செய்ததை முன்னிட்டு, ஜனசக்தி குழுமம் பெருமை கொள்வதுடன், தனது ஊழியர்கள் மத்தியில் மார்பு புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் பணியிடத்தில் நேர்த்தியான மனநிலையை ஊக்குவிப்பது போன்றவற்றை இலக்காகக் கொண்டு இந்த அமர்வை ஏற்பாடு செய்திருந்தது. நேர்த்தியான ஈடுபாடு மற்றும் சமூக ஈடுபாடு போன்றவற்றுக்கு ஜனசக்தி குழுமத்தின் ஒப்பற்ற அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்களின் பிரகாரம், உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் பெண்கள் மத்தியில் மார்பு புற்றுநோய் என்பது அதிகளவில் காணப்படும் புற்றுநோயாக அமைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய புற்றுநோய் பதிவேட்டின் பிரகாரம், பெண்களில் ஏற்பட்டிருந்த புற்றுநோய்களில் மார்பு புற்றுநோய் 27% ஆக காணப்பட்டதாகவும், மொத்தமாக 54,85 பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களிலிருந்து 124 புதிய மார்பு புற்றுநோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர்.