Home » வங்கிச் செயலியை மேம்படுத்தும் செலான்

வங்கிச் செயலியை மேம்படுத்தும் செலான்

by Damith Pushpika
November 10, 2024 6:07 am 0 comment

வாடிக்கையாளர்களின் வசதி மற்றும் நலன் கருதி செலான் வங்கி, சமீபத்தில் தனது மொபைல் வங்கிச் செயலியில் சிங்களம் மற்றும் தமிழ் மொழி தெரிவுகளை உள்ளடக்கி மேம்படுத்தியது. மும்மொழி சேவைகளின் அறிமுகத்துடன் புதுப்பிக்கப்பட்ட செயலியானது வங்கியின் online சேவைகளுக்கான உள்வாங்கிய அணுகலை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Android மற்றும் iOS இல் கிடைக்கும், செலான் வங்கியின் மொபைல் வங்கிச் செயலி ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் வழங்கும் அதே சேவைகளை வங்கி இப்போது இலங்கையின் இரு முக்கிய உள்ளூர் மொழிகளில் வழங்குகின்றது. செயலியின் புதிய மொழித் தெரிவுகள், வங்கியின் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் மொழி புலமையைப் பொருட்படுத்தாமல் அணுக வழிவகுக்கிறது. இதனூடாக வாடிக்கையாளர்கள் அவர்கள் பெறும் சேவைகளை மதிப்பாய்வு செய்யவும், தங்களுடைய சொந்த பாதுகாப்பு கேள்விகளை அமைக்கவும், கட்டணங்களை செலுத்தவும் மற்றும் நிதி பரிமாற்றங்களையும் சிரமமின்றி மேற்கொள்ளலாம். வாடிக்கையாளர்களுக்கான நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்கும் வகையில், இந்த செயலி மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய செயலி மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக விளங்கக்கூடிய இடைமுகத்துடன் சேமிப்புக் கணக்குகள் மற்றும் கடனட்டை கணக்குகள் உட்பட பல சேவைகளை நிர்வகிக்கலாம்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division