இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி செயற்பாட்டாளராகத் திகழும் Prime Lands (Pvt) Ltd, தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற “வேல்ட் பிஸ்னஸ் அவுட்லுக் விருதுகள் 2024” இல் இரண்டு விருதுகளை சுவீகரித்துள்ளது. இலங்கையில் ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் நிறுவனம் 2024 மற்றும் நிறுவனத்தின் புதிய நிர்மாணத் திட்டமான YOLO க்காக, இலங்கையின் ஆண்டின் சிறந்த ரியல் எஸ்டேட் செயற்றிட்டம் 2024 ஆகிய விருதுகளை Prime Lands (Pvt) Ltd நிறுவனம் சுவீகரித்துள்ளது. இந்த விருதுகளினூடாக, புத்தாக்கம், சிறப்புக்கான ஈடுபாடு மற்றும் உலகத் தரம் வாய்ந்த நியமங்களை பேணுதல் போன்றவற்றினூடாக ரியல் எஸ்டேட் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தி வரும் Prime Lands’ இன் அர்ப்பணிப்பு பிரதிபலிக்கப்பட்டுள்ளது.
Prime Lands இன் ஸ்தாபகரும் குழும தவிசாளருமான பிரேமலால் பிராஹ்மனகே கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடி எனும் வகையில், பாரம்பரிய வரையறைகளுக்கு அப்பாலான வசிப்பிட அனுபவங்களை ஏற்படுத்துவதில் Prime Lands எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தது. செங்கற்கள் மற்றும் சாந்துக் கலவையைக் கொண்டு கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு என்பதற்கு அப்பால் சென்று, கனவுகளுக்கான அடித்தளங்களை ஏற்படுத்தல், எதிர்பார்ப்புகளின் அரண்களை கட்டியெழுப்பல் மற்றும் எமது பிரத்தியேகமான வாடிக்கையாளர்களுக்கு வரையறைகளில்லாத வாய்ப்புகளுடனான கூரைகளை உருவாக்கல் போன்றவற்றில் எமது மூலோபாய தீர்மானம் தங்கியுள்ளது” என்றார்.