Home » கைவினைத்திறனைக் கொண்டாடும் Noyon Lanka

கைவினைத்திறனைக் கொண்டாடும் Noyon Lanka

by Damith Pushpika
November 10, 2024 6:05 am 0 comment

முன்னணி வடிவமைப்பாளர் மற்றும் நிலையான ஜவுளி உற்பத்தியாளரான Noyon Lanka Pvt., இலங்கையில் தனது 20ஆவது ஆண்டு நிறைவை அண்மையில் கொண்டாடியது.

விநியோக தீர்வுகள் வழங்குனராக உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற Noyon, பியகம தலைமை அலுவலகத்தில் “100 வருட ஜரிகை பாரம்பரியம், 20 வருட வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறன்” என்ற தொனிப்பொருளில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்து இந்த தனித்துவமான மைல்கல்லை கொண்டாடியது.

இந்நிகழ்வில், MAS Holdings நிறுவனத்தின் தலைவர் மகேஷ் அமலியன், உப தலைவர் ஷரத் அமலியன் மற்றும் MAS Holdings மற்றும் பிரெஞ்ச் லேஸ் உற்பத்தி நிறுவனங்களின் ஒத்துழைப்புக்காக அர்ப்பணிக்கப்பட்ட Noyon Calais இன் முன்னாள் தலைவர் Olivier Noyon ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், Marie Noelle, இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதரகத்தின் பதில் தூதுவர், பியகம சுதந்திர வர்த்தக வலய முதலீட்டு சபையின் பணிப்பாளர் கித்சிறி குமாரசிங்க, MAS Holdings பிரதம நிறைவேற்று அதிகாரி சுரேன் பெர்னாண்டோ மற்றும் Noyon பிரதம நிறைவேற்று அதிகாரி Husni Salieh ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Noyon உடனான தொடர்பு குறித்து கருத்து தெரிவித்த மகேஷ் அமலியன், “பிரெஞ்சு ஓவியக் கலையை புதிய மைல்கல்லுக்கு கொண்டு வந்த நிறுவனமாக Noyon Lankaவை குறிப்பிடலாம்.

தற்போது இந்த நாட்டின் ஜவுளிப் பொருட்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.இதன் மூலம் பெரும் முன்னேற்றம் அடைந்து பல்வகைப்படுத்தல் மூலம் இரண்டையும் தாண்டி எங்களின் சிறப்பை வெளிப்படுத்த முடிந்தது” என தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division