E.B. Creasy & Co., PLC இன் புதுப்பிக்கத்தக்க வலுப் பிரிவான E.B. Creasy Solar, இலங்கையில் Thornova Solar இன் பிரத்தியேக விநியோக உரிமைப் பங்காளராக நியமிக்கப்பட்டுள்ளது. இதனூடாக நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுத் தீர்வுகளை விநியோகிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய படியை E.B. Creasy Solar முன்னெடுத்துள்ளது.
இந்த மூலோபாயப் பங்காண்மையினூடாக, நிலைபேறான அபிவிருத்திக்கு நீண்ட காலமாக பங்களிப்பு வழங்கும் E.B. Creasy Solar, உள்நாட்டு சந்தையில் Thornova Solar இன் நவீன சூரிய வலுத் தயாரிப்புகளை பெற்றுக்கொடுக்க ஏதுவாக அமைந்திருப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு தங்கியிருக்கக்கூடிய மற்றும் வினைத்திறனான சூரிய வலுத் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கக்கூடியதாக இருக்கும். அத்துடன், நாட்டில் புதுப்பிக்கத்தக்க வலுத் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் முன்னணி சேவை வழங்குநர் எனும் E.B. Creasy Solar இன் நிலையை மேலும் உறுதி செய்வதாகவும் அமைந்திருக்கும்.
E.B. Creasy Solar இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி இசுரு லேகம்கே இந்தப் புதிய பங்காண்மை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், “Thornova Solar உடன் கைகோர்த்து, அவர்களின் புத்தாக்கமான சூரிய வலுத் தயாரிப்புகளை இலங்கையில் விநியோகிக்க முன்வந்துள்ளதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கின்றோம்.” என்றார்.