சுமந்திரன் போன்றோர் தங்கள் மீது போலியான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் (01) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுக்கு நன்றாக தெரியும், அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதித் தேர்தலின் போது மிகத் தெளிவான கொள்கை பிரகடனம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தேர்தல் விஞ்ஞாபனங்களில் நாங்கள் கூறியுள்ள பல்வேறு விடயங்கள் இருக்கும் போது, இங்குள்ள தமிழ்க்கட்சிகள் எங்கள் மீது பல்வேறு போலியான கருத்துக்களை முன்வைக்கின்றனர். இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்காது அதை பரிசீலனை போகிறார்கள் என தெரிவிக்கிறார்கள், அத்தோடு அநுரவின் அரசாங்கத்திலும் இவ்வாறான போக்குகளை காணக்கூடியதாக இருக்கிறது என கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இந்த விடயத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சுமந்திரன் முன்னிலை வகிக்கின்றார்.
எங்களுக்கு அவர் மீது மரியாதை இருக்கிறது.
ஆனால் நாங்கள் தெரிவிக்கும் விடயங்களை நீங்கள் உங்களது வாயால் திரிபுபடுத்துதல் உங்களுக்கு நல்லது கிடையாது என தெரிவித்தார்.