நூற்றி நான்கில் கண்டேன்
கட்டம் போட்ட
சட்டை அணிந்த
அந்த இளைஞன்
நெற்றியில் திருநீற்று சாந்தும்
இடது மணிக்கட்டில்
இறுக்கிக் கட்டப்பட்ட
மஞ்சல் கயிறும்
சட்டை பையில் சிணுங்கிய
விலை உயர்ந்த ரக
தொலைபேசியை
காதில் வைத்து
பேசும்போது
அந்நிய ஆங்கிலத்தில்
பயணிகளுக்கு
தொந்தரவு இல்லாமல்
உரையாடியும்
அருகில் நின்ற முதியவருக்கு
தன் இருப்பிடம்
கொடுத்து நகர்ந்தவனை
இறங்கும் வரை
விழி இமைக்காமல் பார்த்தேன்
தன் இடம் வர
தடம்பதித்து சென்றவன்
மஞ்சள்கோட்டை கடக்க
மல்லு கட்டிக்கொண்டி௫ந்த
சிறுவர்களுக்கு
வழிகாட்டிய போது
வென்றுவிட்டான்
பார்வையாளர்களின் மனதை
அன்றிலிருந்து தினமும்
நூற்றி நான்கில் தேடுகிறேன்
திருநீறு பூசப்பட்ட
அந்த முகத்தை
நூற்றி நான்கில் கண்டேன்
25
previous post