நானுஓயா, ரதெல்ல குறுக்கு வீதியில் வேன் ஒன்றும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
நுவரெலியா – நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் நேருக்கு நேர் மோதியதில் வேனில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று முன்தினம் (01) இரவு 07 மணியளவில் ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் சமர்செட் தோட்டப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கல்முனைப் பகுதியைச் சேர்ந்த அனிதா மொஹமட் அல்சார் (வயது 53) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கல்முனை சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த சிலர் நுவரெலியா நோக்கி பயணித்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது, வேனில் 18 பேர் பயணித்துள்ளதுடன், லொறியில் சாரதி மற்றும் உதவியாளர், பயணித்துள்ளதாகவும், எனினும், லொறியின் சாரதி மாத்திரமே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், விபத்தில் வேனும் லொறியும் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
(ஹற்றன் சுழற்சி நிருபர்)