Home » டிஜிட்டல் பொருளாதாரம்; பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் நியமனம்

டிஜிட்டல் பொருளாதாரம்; பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் நியமனம்

by Damith Pushpika
November 3, 2024 6:00 am 0 comment

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதான ஆலோசகராக கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார குமார திசாநாயக்க அண்மையில் இவரிடம் கையளித்தார்.

பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துதல், தேசிய போட்டித்தன்மை மற்றும் சகல பிரஜைகளுக்கும் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் எதிர்பார்ப்புடன், இவருக்கு இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னேறிய நாடுகளுக்கு இணையாக, நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தமது தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பும் இவரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் தகவல், தொடர்பாடல், தொழில்நுட்பம், மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் ஆகிய துறைகளை உலகத் தரத்துக்கு மேம்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.இதில், பிரஜைகளை வலுவூட்டுவதற்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளை (DPI) நிறுவி,பல்துறை டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு அரசாங்கம் உறுதியான அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

வேகமான டிஜிட்டல் பொருளாதாரத்துடன், பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு வழிவகுக்கும் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி தொடர்பான பாரம்பரிய அபிவிருத்தி வாய்ப்புக்களை

உள்வாங்கும் வகையில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கலாநிதி ஹான்ஸ் விஜயசூரியவின் நியமனம் மேலே குறிப்பிட்ட தொலை நோக்குப் பார்வையை அடைவதற்கான ஒரு முக்கிய படியாக அமைந்துள்ளது .

சர்வதேச தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் பிரபலமானவரான கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, தற்போது Axiata Group Bhd நிறுவனத்தின் தொலைத்தொடர்பு வணிகத்தின் பிரதான நிறைவேற்றதிகாரி மற்றும் குழும நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றுகிறார். குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இப்பதவியிலிருந்து விலகுவதாக இவர் அறிவித்துள்ளார். எனினும், இக்காலகட்டத்தில், கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் (ICTA) பணிப்பாளர் சபைக்கு தலைமை வகிப்பார். இதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கான இவ்வேலைத்திட்டங்களைத் திட்டமிடல் மற்றும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந் நியமனத்தின் பின்னர் டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான நிறுவன கட்டமைப்புக்குள், பல நிறைவேற்றுத் தலைமைப் பாத்திரங்களை அவர் வகிக்க உள்ளார். இதற்கு மேலதிகமாக, ஜனாதிபதியின் விடயப்பரப்பின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்ட அமைச்சான டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை மேற்பார்வையிடும் உயர்மட்ட நிறுவனமான டிஜிட்டல் பொருளாதார அதிகார சபையின் தலைவர் ஆகிய இரண்டு பதவிகளையும் இவர் வகிப்பார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division