Sysco LABS அண்மையில் பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பட்டம் பயிலும் மாணவர்களுக்காக முன்னெடுக்கும் தனது Project Guiding Leadership and Outreach (GLO) திட்டத்தை நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் சமூகங்களில் மாற்றம் ஆகியவற்றை ஏற்படுத்துவதை இலக்காகக் கொண்டு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
GLO-சான்றளிக்கப்பட்ட Sysco LABS ஊழியர்களால் இந்த நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், ஸ்ரீ ஜயவர்தனபுர, கொழும்பு, களனி, ரஜரட்ட, பேராதனை மற்றும் SLIIT பல்கலைக்கழங்களின் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தது. ஐக்கிய நாடுகளின் 17 நிலைபேறான இலக்குகளுடன் பொருந்தும் வகையில் அமைந்திருப்பதுடன், Sysco LABS’ இன் பிரதான நோக்கு என்பது, ‘உணவு மற்றும் அரவணைப்பை ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு பகிர்ந்து கொள்ளும் வகையில் உலகை இணைப்பது’ ஆக அமைந்துள்ளது.
சமூக சென்றடைவு மற்றும் நிலைபேறான விருத்தி ஆகியவற்றில் இளம் தலைமுறையினரை தயார்ப்படுத்தல் விழிப்புணர்வூட்டும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. சமூக தலைமைத்துவம் மற்றும் அதன் தாக்கம் தொடர்பில் நிறுவனத்தின் வழிமுறை தொடர்பில் Sysco LABS இன் மக்கள் செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் ரெஹான் அந்தனிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இளைஞர்களின் அபிவிருத்திக்காக Project GLO’இன் முயற்சிகள் என்பது, புதிய தலைமுறை தலைவர்களுக்கு அவசியமான திறன்கள் மற்றும் அறிவை பெற்றுக் கொடுத்து அவர்களை தயார்ப்படுத்துவதாக அமைந்திருக்கும் என்பதுடன், அதனூடாக அவர்களின் எதிர்காலம் மற்றும் சமூகத்துக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.