நாட்டின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் விற்பனையாளரான SINGER ஸ்ரீ லங்கா, இலங்கையின் தேசிய ICT தீர்வு வழங்குநரான SLT-MOBITEL உடன் மூலோபாய பங்காளித்துவத்தில் இணைந்துள்ளது. நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள SINGER கிளைகளில் மொபைல் இணைப்புக்கான அணுகலை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்களின் வசதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு புதுமையான திட்டங்களின் தொடக்கத்தை இந்த ஒத்துழைப்பு குறிக்கிறது.
இந்த கூட்டாண்மையின் ஒரு பகுதியாக, SINGER அதன் 410 காட்சியறைகளிலும் SLT-MOBITEL சிம் கார்டு விற்பனையை இணைத்துள்ளது. இந்த முயற்சியானது, SINGER விற்பனை நிலையங்களில் கைத்தொலைபேசிகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்த இடத்திலேயே SLT- MOBITEL சிம் கார்டை வசதியாகத் தெரிவுசெய்யக்கூடியதாகமையும். SINGER இன் விற்பனை அனுபவத்திற்குள் சிம் கார்டு விற்பனையின் ஒருங்கிணைப்பு, தடையற்ற, ஒரே கூரையின் கீழான கொள்வனவு அனுபவத்தை பெற்று பயனடைய முடியும் என்பதை உறுதி செய்கிறது. சிம் கார்டுகளை வாங்குவதுடன், வாடிக்கையாளர்கள் அதே இடத்தில் ஆரம்ப ரீலோட் சேவையையும் பெறலாம், இது அவர்களின் புதிய மொபைல் இணைப்புடன் தொடங்கும் செயல்முறையை எளிதாக்குகிறது.
சிறந்த தொலைத்தொடர்பு அனுபவத்தை வழங்குவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையாக, SLT-MOBITEL ஆனது 4.5G, VOLTE, 5G சோதனைச் சேவைகள் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவதன் மூலம் அதன் வலையமைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துகிறது.