தனது நாமத்தின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும் நுகர்வோரைப் பாதுகாப்பதற்குமான உறுதியான அர்ப்பணிப்புடன், ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்ட casio போலி கடிகாரங்களுக்கு எதிராக வெற்றிகரமான அமலாக்கத்திற்குப் பிறகு, சமீபத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க அமலாக்க நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த முன்முயற்சியானது, இலங்கை சந்தையில் அதிகரித்து வரும் போலியான casio டெஸ்க்டாப் மற்றும் விஞ்ஞான கால்குலெட்டர் தயாரிப்புகளின் பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதையும் அதன் மதிப்புமிக்க நுகர்வோரைப் பாதுகாப்பதையும் இலக்காகக் கொண்ட அமுலாக்கக் கொள்கையின் ஒரு பகுதியாகும்.
உள்ளூர் சட்ட நிறுவனம் மற்றும் கொழும்பு குற்றப்பிரிவு உடன் இணைந்து, கொழும்பில் உள்ள ஒரு முன்னணி மொத்த விற்பனையாளர் மற்றும் எழுதுபொருள் இறக்குமதியாளர் மீது சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்த ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாட்டின் விளைவாக, காசியோ கால்குலேட்டர் மாதிரிகள் இயங்குவதைப் பின்பற்றும் கணிசமான அளவு போலி கால்குலேட்டர்களை அதிகாரிகள் கைப்பற்றினர்.
Casio இந்தியாவின் சட்டப் பிரிவுத் தலைவர் குர்மீத் சிங், “உலகளாவிய தலைவராக, எங்கள் வர்த்தகநாமத்தின் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்துவதற்கும், அத்தகைய கால்குலேட்டர்களை நம்பியிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் Casio ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் உள்ளது.