21
அழித்ததும் அழிந்ததும் போதும் – இனி
அறத்துடன் வாழ்ந்திடக் கற்போம்
பழிகளும் பாவமும் போதும் – இனி
பண்புடன் வாழ்ந்திடக் கற்போம்
ஊழலை நாட்டிலே அகற்றி – உயர்
ஒழுக்கத்தை மனங்களில் செதுக்கி
வீழ்ந்திடும் பெருமையை உயர்த்தி – நற்
பிரஜையாய் நெஞ்சையே நிமிர்த்தி
தோற்றங்கள் மட்டுமே மாறிடில் – பெரும்
தோல்விதான் மிஞ்சிடும் பாரினில்
மாற்றங்கள் வேண்டுமே மனங்களில் – அது
மாற்றிடும் நாட்டையே வளங்களில்
இனங்களாய் பிரிந்ததும் போதும் – இனி
இலங்கையர் என்போ மெப்போதும்
மனங்களில் மனிதத்தைப் பேணி- ஓர்
மானுடம் என்றென வாழ்வோம்
–
மூதூர் சுஸானா முனாஸ்