13
என் வாழ்வை நான் எழுதியதில்லை.
என் மகிழ்வை நான் உண்டுபண்ணியதில்லை.
என் காயங்களை நான் ஏற்படுத்தியதில்லை.
எதையும் நான் நானாக ஏற்படுத்தவும் முடியாது.
அந்தப் பறவைகள்
அந்த றெக்கைகளுடன் தான் பயணிக்கிறது.
யார் வரைந்த பாதையது?
எனக்கும்தான் கால்கள் உண்டு,
கண்களும், கைகளுமுண்டு.
ஆனால் நான் நானாக
பயணிப்பதில்லையே
ஏன் பார்ப்பதுமில்லை, உண்ணுவதுமில்லை.
இப்படித்தான் என் வாழ்வை
நானே எழுத முடியவில்லை.
நீயும் அவர்களும் சொல்வது போல்
இங்கே எதுவும் எழுப்படவில்லை.
எழுதிய பின் தான் இங்கே
நீயும் நானும், அவர்களும்.