Home » திருமதி பவானி சச்சிதானந்தனின் இரு நுால்களின் வெளியீட்டு விழா

திருமதி பவானி சச்சிதானந்தனின் இரு நுால்களின் வெளியீட்டு விழா

by Damith Pushpika
October 27, 2024 6:20 am 0 comment

பிரபல எழுத்தாளர் திருமதி பவானி சச்சிதானந்தன் எழுதிய இரு நுால்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 2024.11. 03 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 3 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாதுரை கஜமுகன் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ் வெளியீட்டு விழாவில் வாழ்க்கை என்பது என்ற சிறுகதைகளின் தொகுப்பு நுாலும் நதிகளின் ஓட்டம் கடலினிலே என்ற கவிதை தொகுப்பு நுாலும் வெளியிடப்படவுள்ளது. யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லுாரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ஜெயலட்சுமி உதயகுமார் சிறப்பு விருந்தினராகவும் ஞானம் இதழின் பிரதம ஆசிரியர் டொக்டர் ஞானம் ஞானசேகரன், தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிவா ராமசாமி, மூத்த எழுத்தாளர் மேமன்கவி, சிரேஷ்ட ஊடகவிலாளர் தனபாலசிங்கம், ஜனரஞ்சக எழுத்தாளர் மொழிவாணன் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொள்வார்கள். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லுாரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ஜெயலட்சுமி உதயகுமார் நுால்களின் முதற்பிரதிகளை பெற்றுக் கொள்வார். சட்டத்தரணி ரஷித் எம். இம்தியாஸ் சிறுகதை நுாலைப் பற்றி நுாலாய்வு செய்வார். கவிதாயினி திருமதி ந. தாமரைச்செல்வி கவிதை நுாலைப் பற்றி நுாலாய்வு செய்வார். யாழிசை கவித்தடாகத்தின் நிறுவனர் திருமதி ரவீந்திரகலா சிறப்புரையாற்றுவார். நேத்ரா தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் தனஞ்சன், நேத்ரா தொலைக்காட்சியின் அறிவிப்பாளர் திருமதி காயத்ரி ரொசான், திருமதி பிரணீதா கோணேஸ்வரன், கனடா தமிழாழி தொலைக்காட்சியின் துணைச் செயலாளர் திருமதி வாசுகி பி. வாசு, இணைச் செயலாளர் கலைமாமணி பொன் பத்மநாதன், துணைத் தலைவர் திருமதி பொன். தாட்சாயினி சர்மா, வலம்புரி கவிதா வட்டத்தின் தலைவர் நஜுமுல் ஹுசைன், செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன், பொருளாளர் எம்.டீ. ஈழகணேஷ், தேசிய அமைப்பாளர் தனபாலன் ஆகியோர் ஊடக சிறப்பாளர்களாக கலந்து கொள்வார்கள். இலங்கை பொன்மனச் செம்மல் எம். எஸ். தாஜ்மஹான், கவிஞர்களான பிரேம்ராஜ், ராஜா நித்திலன், தரன், ஏ. கே. இளங்கோ, கன்னல்கவி அமீர் அலி, வாழைத்தோட்டம் எம். வசீர், சிந்தனைப்பிரியன், வதிரி ரவீந்திரன், ஜமால்தீன், எம்.பி.எஸ். பாலா, முஸம்மில், எழுத்தாளர் திருமதி பாத்திமா நளீரா, கவிதாயினிகளான மசீதா அன்சார், திருமதி அருந்தவம் அருணா, தங்கமணி, செல்வி சிரோமி ஆகியோர் சிறப்புப் பிரதிகள் பெறுவார்கள். செல்வி ஜெ. பவிக்‌ஷினியின் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகும்.

கணக்காளர் திருமதி தாமரைச்செல்வி வரவேற்புரை நிகழ்த்த, திருமதி பவானி சச்சுதானந்தனின் ஏற்புரையுடன் நிகழ்வுகள் நிறைவுபெறும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division