கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் 48 ஆவது ஆண்டு கால பரதநாட்டியப் பணியை கொண்டாடும் வகையில் கொழும்பு நாட்டிய கலா மந்திர் வழங்கிய ‘நாட்டியதரங்கினி’ நடன நிகழ்ச்சி கடந்த 17ஆம் திகதி மாலை வெள்ளவத்தை ராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது நடன ஆசிரியை கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் நடைபெற்றது.
பல இளம் மாணவர்களும், சிரேஷ்ட கலைஞர்களும் இணைந்து தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வாக அமைந்தது.
அது மட்டுமின்றி இம்முறை நாட்டிய தரங்கிணி நடன நிகழ்வில் ‘கிருஷ்ணா’ என்னும் நாட்டிய நாடகம் மேடையேற்றப்பட்டது.
இந்திய தூதரகத்தின் விவேகானந்த கலாசார நிலையத்தின் பணிப்பாளர், பேராசிரியர் அங்குரன் டத்தா பிரதம அதிதியாகவும், நீதியரசர் பிரபாகரன் குமாரரத்தினம் (இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி) மற்றும் செஞ்சொற்செல்வர்’ ‘கலைமாமணி’ எஸ். விஸ்வநாதன் (சிரேஷ்ட ஊடகவியலாளர், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தமிழ் நிகழ்ச்சிகள் முன்னாள் பணிப்பாளர்) விழாவின் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் மாணவிகளின் கலை நிகழ்வுகளையும் குரு, மாணவர்களால் கெளரவிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.