இலங்கை மத்திய வங்கி, எதிர்வரும் 29 ஆம் திகதி 145,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
அந்த திறைசேரி உண்டியல்களில், 90 நாட்களில் முதிர்வடையும் 55,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வு பெறும் 55,000 மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்களும் அடங்குகின்றன.
அத்துடன், 364 நாட்களில் முதிர்வடையும் திறைசேரி உண்டியல்கள் 35,000 மில்லியன் ரூபாவாகும். இந்த திறைசேரி உண்டியல்களுக்கான ஏலங்களை ஏற்றுக்கொள்வது ஒக்டோபர் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணியுடன் நிறைவடைகிறது. திறைசேரி உண்டியல்களுக்கான குறைந்தப்பட்ச ஏலத்தொகை 05 மில்லியன் ரூபாவாகும்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏலதாரர்கள் உரிய கொடுப்பனவுகளை நவம்பர் 01 ஆம் திகதி செலுத்த வேண்டுமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.