Home » தமிழருக்கு எதிராக USA ஒருபோதும் செயற்படாது

தமிழருக்கு எதிராக USA ஒருபோதும் செயற்படாது

ஜூலி சங்

by Damith Pushpika
October 27, 2024 6:15 am 0 comment

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக எவ்வாறான அணுகுமுறைகளை பின்பற்றி வருகிறதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், வடக்கில் தமிழ்த் தரப்பினரிடம் கேட்டறிந்துள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், தமிழ் தரப்பினரை கடந்த வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட தமிழ்க் கட்சிகள் ஏன் பிரிந்து நிற்கின்றன? இவர்களால் ஒற்றுமையாகச் செயற்பட முடியாதா? அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? என அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு தமது தரப்பு நியாயங்களை தமிழ் தரப்பினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதேவேளை, பாாளுமன்றத் தேர்தலில் அரசியல் தீர்வு குறித்து தமது ஆணையை தமிழ் மக்கள் வெளிப்படுத்தும் நிலைப்பாட்டுக்குப் புறம்பாக ஒருபோதும் செயற்படப்போவதில்லை எனவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங், தமிழ் தரப்பினரிடம் உறுதிளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப பொறுப்புக்கூறல் பொறிமுறைகளின் அவசியம், நீடித்த அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கத்துக்கான சிறுபான்மையினரின் நீண்டகால வாதங்கள் இலங்கையில் நீடித்த அமைதியை உறுதி செய்யும் எனவும் மாற்றத்துக்கான மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தையும் தமிழ் தரப்பினரிடம் ஜூலி சங் எடுத்துரைத்துள்ளார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Sajeewan Prasad – 0777861202
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division