Sunshine Holdings PLCஇன் மருந்து உற்பத்தி பிரிவான, Lina Manufacturing,அண்மையில் இலங்கை நுரையீரல் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து, உலக நுரையீரல் தினம் 2024 மற்றும் கல்லூரியின் முதல் நிறுவனர் தினத்தைத் கொண்டாடியது. செப்டெம்பர் 29 ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்லூரி சபையின் உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், அங்கத்தினர்கள் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டனர். இந்த ஆண்டின் நுரையீரல் மருத்துவக் கல்லூரியின் தொனிப்பொருளான, ‘சுவாசிக்கும்உரிமைக்காக சுவாச ஆரோக்கியத்தில் சமத்துவம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த ஆண்டின் உலக நுரையீரல் தினத்தின் தொனிப்பொருள், ‘அனைவருக்கும் சுத்தமான காற்று மற்றும் ஆரோக்கியமான நுரையீரல்கள்’, காற்றின் தரம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியம் இடையே உள்ள முக்கியமான தொடர்பை வலியுறுத்துகிறது, இது Lina Manufacturing தனது புத்தாக்கமான சுவாசப் பொருட்கள் மூலம் உறுதியாக ஆதரித்து வருகிறது. சர்வதேச சுவாச சங்கங்களின் கூட்டமைப்பு (Forum of International Respiratory Societies – FIRS) நடத்தும் உலகளாவிய முயற்சியின் கீழ், இந்த ஆண்டின் பிரசாரம், ஆண்டுதோறும் சுமார் 7 மில்லியன் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய காற்று மாசுபாட்டின் பேரழிவு தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சித்ததுடன் இது நாள்பட்ட அடைப்பு நுரையீரல் நோய் (COPD), நுரையீரல் புற்றுநோய் மற்றும் சுவாச தொற்றுகள் போன்ற நிலைமைகளுக்கு பங்களிக்கிறது.
இந்த நிகழ்ச்சியில், இலங்கையில் சுவாச மருத்துவத்தை மேம்படுத்துவதற்காக பங்களிப்பு வழங்கிய இலங்கையின் சிரேஷ்ட நுரையீரல் ஆலோசனை மருத்துவ நிபுணர்கள் கௌரவிக்கப்பட்டனர்.